பித்ரு ஆராதனம்
சந்தேகங்களும் விளக்கமும்
மரணம் இரண்டு நாளில் முடியும் நிகழ்வு அல்ல — ஒரு வருஷம் நீளும் பித்ரு தீக்ஷை!
தகனத்தோடு முடிவதல்ல பித்ரு கடமை; அங்கிருந்துதான் தொடங்குகிறது புத்ரனின் பித்ரு தர்மம்! தசாஹம், ஏகோத்திஷ்டம், ஸபிண்டீகரணம் — இவை சடங்குகள் மட்டுமல்ல; சாஸ்திரம் வகுத்த பித்ரு பரிபாலனப் படிநிலைகள்! மாஸிகம் முதல் ஆப்திகம் வரை ஒவ்வொன்றும் உரிய திதியிலேயே நிகழ வேண்டும்; ஆங்கிலத் தேதி ச்ராத்தத்திற்கு அளவுகோல் அல்ல! **பெற்றவர்கள் மறையலாம்; அவர்களுக்குச் செய்ய வேண்டிய தர்மம் மறையக்கூடாது — அதுவே உண்மையான பித்ரு பக்தி!**
08 Oct 2026கணவனை இழந்த பெண்ணின் வளையலை உடைப்பது சாஸ்திரமா? சோகத்தில் இருக்கும் பெண்ணைச் சடங்கு என்ற பெயரில் வதைக்காதீர்கள்!
கணவனை இழந்தவளின் துயரமே போதும்; **“சம்பிரதாயம்” என்ற பெயரில் அவள் வளையலையும் மனதையும் சேர்த்து உடைக்காதீர்கள்!** வளையலைத் தட்டி உடைக்கவும், பிறர் மாங்கல்யத்தை அறுக்கவும் சாஸ்திரப் பிரமாணம் எங்கே? — **இருந்தால் மூலவாக்கியத்தைக் காட்டுங்கள்!** ஊர் வழக்கமும், சமூக ஊடகப் பேச்சும், மூடப்பழக்கமும் ஒருபோதும் **வேத–சாஸ்திர விதியாகிவிடாது!** **பிரமாணம் இல்லையா? அந்தப் பழக்கத்தை மூட்டை கட்டி ஓரமாக வையுங்கள் — பெண்ணின் கண்ணீரைச் சடங்காக்காதீர்கள்!**
08 Oct 2026திருமணமான பெண்ணுக்கும் பித்ரு தர்மம் உண்டு! பிறந்த வீட்டிலும் புகுந்த வீட்டிலும் அவளுக்குரிய கடமை என்ன?
திருமணம் ஆனதால் பிறந்த வீட்டுப் பித்ரு தர்மம் முடிந்துவிடுவதில்லை; பெண்ணின் தர்மப் பொறுப்பு இன்னும் விரிவடைகிறது! பெற்ற தாய்–தந்தையரைப் பராமரிப்பதும், அவர்களுக்குப் பிற்காலப் பித்ரு கைங்கரியம் குறையாமல் பார்த்துக்கொள்வதும் அவளுடைய கடமை. புகுந்த வீட்டில் மாமனார்–மாமியாரைச் சுஶ்ரூஷிப்பதும், கணவனின் பித்ரு கர்மங்களுக்கு உறுதுணையாக இருப்பதும் இல்லற தர்மம். **பிறந்த வீட்டை மறக்காமலும், புகுந்த வீட்டுப் பித்ரு தர்மத்தைக் கைவிடாமலும் வாழ்வதே ஒரு பெண்ணின் உயர்ந்த பித்ரு பரிபாலனம்!**
07 Oct 2026“அப்பா அம்மாவுக்கு எதுவுமே செய்ய முடியவில்லையே!” என்று அழாதே! அவர்கள் சென்றபின் செய்ய வேண்டிய பித்ரு தர்மத்தை தவறவிடாதே!
**“அப்பா அம்மாவுக்கு எதுவும் செய்யவில்லையே!” என்று அவர்கள் மறைந்தபின் அழுவது மட்டும் பித்ரு பக்தியல்ல!** உயிருடன் இருக்கும்போது பராமரிப்பதும், மறைந்தபின் சிராத்தம், தர்ப்பணம், மாசிகம், ஆப்திகம் முதலியவற்றைத் தவறாமல் செய்வதுமே உண்மையான புத்ர தர்மம். **அமாவாசை, மாதப்பிறப்பு, மஹாளயம், வருடாந்திர திதி — இவை வெறும் சடங்குகள் அல்ல; பித்ருக்களுக்குச் செலுத்தும் தர்மக் கடன்!** **பெற்றோர் மறைந்துவிடலாம்; ஆனால் அவர்களிடம் ஒரு புத்ரனுக்குள்ள பித்ரு தர்மம் ஒருபோதும் மறைந்துவிடுவதில்லை!**
07 Oct 2026படையல் மட்டும் போதுமா? பித்ருக்களுக்கு நாம் செய்ய வேண்டிய உண்மையான கடமை என்ன?
*படையல் வைத்தால் மட்டும் பித்ரு கடன் தீர்ந்துவிடுமா? காக்கைக்குச் சாதம் வைத்தால் சிராத்தம் நிறைவடைந்துவிடுமா?* ஆடி, தை, புரட்டாசி அமாவாசைகள் மட்டும் வருடாந்திர திதிச் சிராத்தத்திற்கு மாற்றாகுமா? *படையல், தர்ப்பணம், சிராத்தம் — இம்மூன்றிற்கும் உள்ள சாஸ்திரபூர்வமான வேறுபாடு என்ன?* பித்ருக்களுக்கு நாம் உண்மையில் செய்ய வேண்டிய கடமை என்ன என்பதைப் பிரமாணங்களுடன் அறிந்துகொள்வோம்!
27 Sep 2026புரட்டாசியும் பித்ரு ஆராதனையும் - முன்னோர்களை மறவாத மகாளயப் பெருங்காலம்
நம்முடைய வாழ்க்கை நம்மிடமிருந்து தொடங்கவில்லை. நமக்கு முன்னால் வாழ்ந்த பல தலைமுறைகளின் தொடர்ச்சிதான் நாம். அந்த முன்னோர்களை நினைந்து, அவர்களுக்குரிய தர்மத்தைச் செய்வதற்காக சாஸ்திரம் விசேஷமாகக் காட்டிய காலமே மகாளய பித்ரு பட்சம். தமிழ் மாதமான புரட்டாசி, சூரியன் கன்னி ராசியில் சஞ்சரிக்கும் காலமாகும். ஆகையால் சௌரமானக் கணக்கில் இக்காலம் கன்னி மாதம் என்று அழைக்கப்படுகிறது. இந்தக் காலத்தை ஒட்டி வருகின்ற மிக முக்கியமான பித்ரு தர்ம அனுஷ்டானமே மகாளய பித்ரு பட்சம்.
27 Sep 2026மஹாளயத்தில் தர்ப்பணம் செய்துவிட்டு இரவில் மீண்டும் விருந்து வேண்டுமா?
தர்ப்பணம் செய்துவிட்டால் பித்ரு கடமை முடிந்துவிடுகிறதா? இல்லை — *அன்றைய நியமமும் பித்ரு கர்மத்தின் ஒரு பகுதியே!* இரவில் மீண்டும் உண்பது ஏன் தவிர்க்கப்படுகிறது? *பரான்னம்* ஏன் விலக்கப்படுகிறது? மஹாளய கர்த்தா உணவு முதல் அன்றாட நடத்தை வரை கடைப்பிடிக்க வேண்டிய நியமங்கள் என்ன? *தர்மசாஸ்திரப் பிரமாணங்களுடன் பித்ரு கர்மத்தின் மறக்கப்பட்ட ஆசாரங்களை அறிந்துகொள்வோம்!*
27 Sep 2026பித்ருக்களுக்குப் பிடித்ததையெல்லாம் படைக்கலாமா? — ‘படையல்’ என்ற பெயரில் சிராத்தத்தை மாற்றாதீர்!
*“முன்னோருக்குப் பிடித்ததைப் படையுங்கள்” — இது சாஸ்திரம் சொன்னதா, நாம் உருவாக்கிக் கொண்டதா?* பித்ருகர்மம் என்பது பிடித்த உணவுகளின் பட்டியல் அல்ல; விதிப்படி செய்ய வேண்டிய புனிதக் கடமை! படையல் என்ற பெயரில் சிராத்தத்தின் வரம்புகள் இன்று எவ்வாறு மாற்றப்படுகின்றன? *பிடித்ததைச் செய்வது நினைவு; விதித்ததைச் செய்வதே பித்ருதர்மம்!*
27 Sep 2026மறுபிறவி எடுத்துவிட்டார்; இனி தர்ப்பணம் எதற்கு?
“இறந்தவர் மறுபிறவி எடுத்துவிட்டார்; இனி தர்ப்பணம் வேண்டாம்”, “படத்தை வீட்டில் வைத்தால் ஆத்மா சிக்கிக்கொள்ளும்” என்று எந்த ஷாஸ்திரப் பிரமாணமும் இல்லாமல் பேசுபவர்கள் முதலில் வெட்கப்பட்டுத் தலைகுனிய வேண்டும். பித்ரு கர்மம் ஒரு மூடநம்பிக்கை அல்ல; மாசிகம், ஆப்திகம், தர்ப்பணம் ஆகியவை தெளிவான தர்மஶாஸ்திர மரபுகள். மறுபிறவி ஏற்பட்டிருந்தாலும், முறையாகச் செய்யப்படும் அர்ப்பணம் அந்த ஜீவனை அதற்கேற்ற நிலையில் அடைகிறது என்று புராணங்களே விளக்குகின்றன. **வாட்ஸ்அப் செய்தி ஷாஸ்திரம் அல்ல; யூடியூப் பேச்சு பிரமாணம்
21 Sep 2026லக்னத்தில் மாந்தி இருந்தால் தில ஹோமம் செய்ய வேண்டுமா?
லக்னத்தில் மாந்தி இருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக தில ஹோமம் செய்ய வேண்டும் என்பது சாஸ்திர விதியல்ல. மாந்தி என்பது ஜோதிடத்தில் ஆராயப்படும் ஒரு உபகிரக நிலை. அது லக்னத்தில் இருப்பதை மட்டும் வைத்துக்கொண்டு, “பித்ரு தோஷம் இருக்கிறது”, “பிரேத தோஷம் இருக்கிறது”, “தில ஹோமம் கட்டாயம் செய்ய வேண்டும்” என்று முடிவு செய்வது முறையானதல்ல.
16 Sep 2026